Latest News

  

16 ஆண்டுகளுக்கு பின்பு பிறந்த குழந்தை !! அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த அதிமுக எம்.எல்.ஏ..

இளையான்குடி அருகே கீழநெட்டூரைச் சேர்ந்தவர் எஸ்.நாகராஜன் (49). இவர் கடந்த ஆண்டு மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவருக்கு 2003-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்நிலையில் இவரது மனைவி சிவசங்கரி 16 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமானார். அவர் கர்ப்பக் காலத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பரிசோதித்து வந்தார்.

இந்நிலையில் அவர் பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 9-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரி நேற்று வீடு திரும்பினார்.

சாதாரண சளி, காய்ச்சலுக்கே தனியார் மருத்துவமனைக்கு செல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், தனது மனைவியை அரசு மருத்துவமனையில் சேர்த்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மானாமதுரை எம்.எல்.ஏ திகழ்கிறார்.

மேலும் இந்நிகழ்வு அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கையை மக்களிடையே அதிகரிக்கும். இதுகுறித்து எம்எல்ஏ எஸ்.நாகராஜன் கூறியதாவது ; எனது மனைவி எப்போதும் எளிமையை விரும்பக் கூடியவர்.

அவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதையே விரும்பினார். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவரது குடும்பத்தாரே அரசு மருத்துவமனைக்கு செல்லாவிட்டால், பொதுமக்களுக்கு எப்படி நம்பிகை ஏற்படும்.

மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவே அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். மேலும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று கூறினார்.

Newstm.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.