கொடைக்கானல்: கொடைக்கானலில் தோட்ட
கலைத்துறை சார்பில் பராமரிக்கப்படும் தோட்டத்தில் பல வண்ண ரோஜா பூக்கள்
பூத்து குலுங்குகின்றன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்செர்வேட்டரி
பகுதியில் அரசு ரோஜா தோட்டம் உள்ளது. தோட்ட கலைத்துறை சார்பில் இந்த
தோட்டம் பராமரிக்கப்படுகிறது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான இந்த
தோட்டத்தில், 15 ஆயிரம் வகையான ரோஜா செடிகள் வளர்க்கப்படுகின்றன. ஏப்ரல்,
மே மாதங்களில் சுற்றுலா துறை சார்பில் கொடைக்கானலில் கோடை விழா
நடத்தப்படும். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த தோட்டத்திற்கு
வருகை தந்து, இங்குள்ள பல வண்ண ரோஜா பூக்களை கண்டு மகிழ்வர்.
ஆனால் கொரோனா ஊரடங்கால், இந்தாண்டு கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 50 தினங்களாக சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின்றி கொடைக்கானல் வெறிச்சோடி கிடக்கிறது. இந்நிலையில் அரசு தோட்டத்தில் பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இது கண்களுக்கு விருந்தளிப்பதாகவும், மனதுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் உள்ளது.

No comments:
Post a Comment