வாஷிங்டன்: கொரோனா கோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கும் வேளையில்
அமெரிக்காவில் பாதிப்பு குறைவான மாகாணங்களில் பார்கள், ரெஸ்டாரென்டுகள்
சமூக இடைவெளி கடைப்பிடித்து நடத்திக்கொள்ள அமெரிக்க அரசு அனுமதி
அளித்துள்ளது.மெக் டொனால்ட்ஸ் உள்ளிட்ட பெரிய உணவு நிறுவனங்கள் இதனைப்
பின்பற்றி தங்கள் அமெரிக்க கிளைகளை நடத்திக்கொண்டு இருக்கின்றன. ஆனால் சிறு
பார்கள், பப்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதன் விளைவாக உலகம்
முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் ரெஸ்டாரென்ட்களில் பணி செய்யும்
ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளனர்.அமெரிக்க பார்களில்
எப்போதும் கூட்டம் களைகட்டும். சமூக இடைவேளை விட்டு பார் நடத்துவது மிகவும்
சிரமமாக இருப்பதாகவும் இவ்வாறு நடத்தினால் தங்கள் தொழில் நஷ்டத்தில்
செல்வதாகவும் பார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜார்ஜியா மாகாணத்தில் கடந்த ஏப்., 27ம் தேதி முதல்
பார்கள் சமூக இடைவேளை விட்டு நடத்த அமெரிக்க அரசு அனுமதி வழங்கியது. டேபிள்
அண்ட் மெயின், ஆஸ்டேரியா மட்டோன், கொயலேஷன் ஃபுட் அண்ட் பிவரேஜஸ் ஆகிய
பிரபல அமெரிக்க பார்கள் இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதால்
மூடப்பட்டன. பார்களை திறந்துவைத்து சமூக இடைவெளி விட்டு நடத்திவந்தால் பாரை
பராமரிக்கும் செலவு கட்டுக்கடங்காமல் செல்கிறது என உரிமையாளர்கள் கூறி
உள்ளனர்.இதனால் பார்கள் திறக்க அனுமதி இருந்தும் திறக்கப்படவில்லை. இதனால்
அமெரிக்க 'குடி'மகன்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பொதுவாக பார்களில் கூட்டமாக இருக்கவே வாடிக்கையாளர்கள் விரும்புவர். இவர்கள் தங்களது நண்பர்களை சந்தித்து உல்லாசமாக பொழுதைக் கழிக்க விரும்புவர். ஆனால் ஊரடங்கு காரணமாக யாரும் பாருக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் சமூக இடைவேளை கடைப்பிடித்து பாரில் மது அருந்த விரும்புவதில்லை.ஆகவே திறந்துவைக்கப்பட்ட சிறு பார்களும் காலியாக உள்ளன.
நம்மூர் போல மதுபிரியர்கள் மதுவை வீட்டில் வாங்கி வைத்து குடிக்கும் பழக்கம் அமெரிக்காவில் குறைவு. பார்களில் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரிக்கும். ஆக, மது விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. எனவே பார்கள், பப்கள் மூடப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment