
மதுரை: மதுரை அருகே கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுவை கொலை செய்ததாக
தந்தை பாட்டி கைது செய்யப்பட்டனர். மதுரை அருகே உள்ள சோழவந்தானை சேர்ந்த
தம்பதி தவமணி,சித்ரா . இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள்
உள்ளனர். இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4வது பெண் குழந்தையை
பெற்றெடுத்தார் சித்ரா. இதனிடையே பிறந்த பெண் சிசு கடந்த சில தினங்களுக்கு
முன்னர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்த வைகையாற்றில் பெண் சிசு
புதைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சோழவந்தான் வி.ஏ.ஓ போலீசில்
புகார் அளித்தார். இதனையடுத்து சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத
பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. சிசுவின் இறப்பு குறித்து போலீசார் விசாரணை
நடத்தி வந்தனர்.
இதனிடையே நான்காவதாக பிறந்த குழந்தையும் பெண்ணாக
பிறந்ததால் பெற்ற தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் சிசுவிற்கு கள்ளிப்பால்
கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது
செய்தனர்.
No comments:
Post a Comment