சென்னை: சிறிய கார்களில் 2 பேரும், இன்னோவா போன்ற பெரிய கார்களில் 3
பேரும் பயணிக்கலாம் என 25 மாவட்டங்களுக்கு மட்டும் லாக்டவுன் தளர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில்
அதிகப்பட்சமாக 20 பேர் மட்டுமே பயணிக்கலாம் என்றும் வேன்களில் 7 பேருக்கு
மேல் பயணம் செய்யக் கூடாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே
கார் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வோர் முகக்கவசம் கட்டாயம் அணிய
வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகளில்
20 பேர் மட்டும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் நாளை
முதல் 50 % பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாக்டவுனில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளை முறையாக
பயன்படுத்துமாறும் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கும்
மட்டும் வெளியில் சென்று வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த
தளர்வுகள் அனைத்தும் கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர்,
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி,விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல்,
திருவாரூர், தஞ்சை, நாகை, தருமபுரி, கிருஷ்ணகிரி,வேலூர், நீலகிரி, உள்ளிட்ட
25 மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும் என அரசு திட்டவட்டமாக
தெரிவித்துள்ளது.
மேலும், நோய் தொற்றின் பரவலை தமிழக அரசு தொடர்ந்து
கண்காணித்து வருவதாகவும், நோய் தொற்று குறைய குறைய மற்ற மாவட்டங்களிலும்
தமிழக அரசு தளர்வுகளை அறிவிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தெரிவித்துள்ளார்.
source: oneindia.com
No comments:
Post a Comment