புது தில்லி: நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து
உள்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரூ.20
லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில் இன்று நான்காவது
நாளாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்.
புது
தில்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன், நிலக்கரி துறையில் தனியார் துறையின் பங்களிப்பு
ஊக்குவிக்கப்படும்.
நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக் கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
பகுதி அளவு நிலக்கரி சுரங்கங்களுக்கு இனி ஏலம் விடப்படும். 500 கனிம வளச் சுரங்கங்கள் வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும்.
முதற்கட்டமாக 50 நிலக்கடி சுரங்கங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும்.
ஏராளமான
நிலக்கரிச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. சுரங்கத்துறையை
மேம்படுத்த தொழில்நுட்ப கருவிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
அலுமினியத்
துறையில் போட்டியை ஊக்குவிக்க பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள்
ஒன்றாக ஏலம் விடப்படும். நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுக்க நிபந்தனைகள்
எதுவும் விதிக்கப்படாது. அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு நிலக்கரி
சுரங்கம் ஏலத்துக்கு கொடுக்கப்படும்.
கனிமவளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment