புலம்பெயர்ந்த தொழிலாளியின் மகன் ஒருவன் சூட்கேஸில் படுத்து உறங்கும் புகைப்படம் இணையவாசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பல தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். உண்பதற்கு உணவு இல்லாமல் பிறரது உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை அவர்களுக்கு உருவாகியுள்ளது. அதே போல தங்கள் சொந்த மாநிலங்களை விட்டுவிட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று வேலைபார்க்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
அவர்கள் தங்கி இருக்கும் ஊர்களில் வேலை இல்லாததால் சொந்த ஊர்களுக்கே செல்ல முடிவெடுத்து சைக்கிள் மூலமாகவோ, நடைபயணத்திலோ சொந்த ஊர் செல்கின்றனர். அப்படி இருக்கையில், டெல்லியில் ஆக்ரா நெடுஞ்சாலையில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் மகன் சூட்கேஸில் படுத்து உறங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment