Latest News

தமாகா மகளிரணி சார்பில் 300 பேருக்கு நிவாரணப் பொருள்கள்

சிதம்பரம் நகரில் ஊரடங்கு காலத்தில் 50 நாட்களாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முத்து மாணிக்க நாடார் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு 300 பேர்களுக்கு அரிசி மளிகை காய்கறிகள் ஆகியவற்றினை வழங்கிப் பேசினார். அவர் பேசுகையில் சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். முகக்கசவம் கட்டாயம் அணிய வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தினார். நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். 

மாவட்ட மகளிரனி தலைவி ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் ரஜினிகாந்த், மாவட்ட நிர்வாகிகள் ராஜாசம்பத்குமார், எஸ்.கே.வைத்தி, கே.நாகராஜன், பாண்டு, மாவட்ட தொண்டர் அணி தலைவர் தில்லை கோ.குமார், இளைஞரணி தலைவர் துரை சிங்காரவேலு, மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன் குமராட்சி ஒன்றிய கவுன்சிலர் எம்கே பாலா, இளைஞர் அணியைச் சேர்ந்த ராஜ்குமார், ஆர்.வி.சின்ராஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் மீனா செல்வம், ஜனகம் செல்வி மாலா, ராதா, அழகர் மாலா, ருக்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சமூக ஆர்வலர் டாக்டர் தில்லைஎன் சீனு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். நகர பொருளாளர் எஸ்.எஸ்.நடராஜன் அவர்கள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.