திருவனந்தபுரம்: டெல்லியில் இருந்து
புறப்பட்ட சிறப்பு ரயில் இன்று கேரளா வந்தது. இதில் 7 பேருக்கு கொரோனா
அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
லாக்-டவுன் காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிக்கி
தவிப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல டெல்லியில் இருந்து 15
முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் சேவை கடந்த 2 தினங்களுக்கு முன்பு
தொடங்கியது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து 900க்கும் மேற்பட்ட
பயணிகளுடன் கேரளாவுக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் இன்று அதிகாலை சுமார் 5.15
மணியளவில் திருவனந்தபுரத்தை வந்தடைந்தது.
இந்த ரயில் ேகரளாவில் ேகாழிக்கோடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே நிற்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சிறப்பு ரயிலில் பயணம் செய்ய கோழிக்கோடுக்கு 200, கொச்சிக்கு 260, திருவனந்தபுரத்துக்கு 400க்கும் மேற்பட்டவர்கள் என்று டிக்கெட் எடுத்திருந்தனர். இந்த 3 ரயில் நிலையங்களிலும் பயணிகளை பரிசோதிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி நேற்று நள்ளிரவு ரயில்கோழிக்கோட்டை வந்தடைந்தது. இதில் 20 பேர் கொண்ட குழுக்களாக பயணிகளை இறக்கி, 10க்கும் மேற்பட்ட கவுன்டர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதேபோல திருவனந்தபுரத்தில் நடந்த பரிசோதனையில் ஒருவருக்கு ெகாரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த இவர் மும்பையில் இருந்து டெல்லி வந்து சிறப்பு ரயிலில் திருவனந்தபுரம் வந்துள்ளார். 3 ரயில் நிலையங்களிலும் பயணிகளை அழைத்து செல்ல அரசு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பரிசோதனைக்கு பின்னர் முகக்கவசம், சமூக விலகலை கடைபிடித்து அவர்கள் பஸ்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிலர் தங்கள் சொந்த வாகனங்களிலும் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே தமிழகத்தை சேர்ந்த ஒருசில பயணிகளும் இந்த ரயிலில் திருவனந்தபுரம் வந்திருந்தனர். அவர்களை அழைத்து செல்ல நாகர்கோவிலில் இருந்து அரசு பஸ் வந்திருந்தது.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்கள் அந்த பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ரயிலில் கோழிக்கோடு, எர்ணாகுளத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த ரயிலில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இருக்கலாம் என்பதால்,
கேரளாவில் இருந்து பயணிகள் ஏறினால் அவர்களுக்கும் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளத்தில் இருந்து பயணிகளை அனுமதிக்கக்கூடாது என கேரள அரசு ரயில்வேயிடம் கோரிக்கை வைத்திருந்தது. அதை ஏற்று கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளத்தில் இருந்து பயணிகள் ஏற அனுமதிக்கப்படவில்லை. இவர்களின் முன்பதிவு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே ரயில் இன்று இரவு 7.15 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து பயணிக்க இந்த ரயிலில் 299 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் செல்லும் பயணிகள் பரிசோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கப்படுவர்.
No comments:
Post a Comment