திருவனந்தபுரம்: இந்தியாவில் பரவி
வரும் கொரோனா வைரஸை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மாநிலங்களுக்கு
முன் உதாரணமாக திகழ்ந்து கேரளா மாநிலத்தில் இன்று 16 பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று
வருபவர்களின் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுகுறித்து கேரள
முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கேரளாவில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா
பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் கொரோனா வைரஸ்
பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பில் 42,287 பேர் வீடுகளிலும், 538 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர் என்று கூறிய அவர் '' கொரோனா பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருவது கவலைக்குரியது. எனவே நாம் இன்னும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது, அவர்கள் அவ்வாறு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தனிமைப்படுத்தலில் இருப்பவர்களைக் கண்காணிக்க, சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் மரண சதவீதமும் கேரளாவில் மிகக்குறைவாகும். உலக அளவில் 5.75 ஆகவும், இந்திய அளவில் 2.83 ஆகவும் இருக்கும்போது, கேரளாவில் 0.58 சதவீதம் மட்டுமே கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment