மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,576 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில்
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள்
தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
எண்ணிக்கை 81,970 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 2,649 ஆக
உயர்ந்துள்ளது.
இந்த நிலையில்
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,576 பேருக்கு கரோனா தொற்று
கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக
மும்பையில் 933 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,467ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம்
இன்று கரோனாவுக்கு 46 பலியான நிலையில் ஒட்டுமொத்த பலி எணிணிக்கை 1,068ஆக
உயர்ந்துள்ளது. மேலும் கரோனா பாதிப்பில் இருந்து 6,564 பேர்
குணமடைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில்
முதலிடத்தில் மகாராஷ்டிர மாநிலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment