
சென்னை: சென்னையில் இன்று (மே 15) புதிதாக 310 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 5,946 ஆக
உயர்ந்தது.தமிழகத்தில் புதிதாக 434 பேருக்கு கொரோனா தொற்று
உறுதியாகியுள்ளது, 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகள்
எண்ணிக்கை 10,108 ஆகவும், பலி எண்ணிக்கை 71 ஆகவும்
அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 310 பேருக்கு கொரோனா தொற்று
உறுதியாகி உள்ளது. இதில், சென்னை வந்த மாலத்தீவை சேர்ந்த ஒருவரும் இதில்
அடக்கம். இதனையடுத்து மொத்த பாதிப்பு 5,946 ஆக உயர்ந்தது. இன்று
தமிழகத்தில் உயிரிழந்த 5 பேரில் 4 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 53 வயது
பெண், 61, 57, 32 வயது நிரம்பிய ஆண்கள் என 4 பேர் சென்னையில் உயிரிழந்தனர்.
ஒருவர் தூத்துக்குடியில் பலியானார். இதுவரை
சிகிச்சைக்குப்பின் 783 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் சென்னையை
சேர்ந்தவர்கள்.சென்னைக்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 21, செங்கல்பட்டில்
20, காஞ்சியில் 11, மதுரை, தேனியில் தலா 6, கடலூர், திருவண்ணாமலையில் தலா
3, பெரம்பலூரில் 2, திண்டுக்கல், தென்காசி, தஞ்சை, விருதுநகரில் தலா
ஒருவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.மாவட்ட வாரியாக விவரம்:
No comments:
Post a Comment