
கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று மட்டும் புதிதாக, 36 பேருக்கு கொரோனா
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின்
மொத்த எண்ணிக்கை, 6,855 ஆக அதிகரித்துள்ளது. அதில், 112 பேர்
உயிரிழந்துள்ளனர்.மலேசிய சுகாதார அமைச்சக பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம்
தெரிவித்துள்ளதாவது:மலேசியாவில் இதுவரை ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளில்,
79.3 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர். புதிதாக பாதிப்புக்கு உள்ளாவோரில் 50
சதவீதத்தினருக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறிகள் வெளிப்படையாக தென்படாமல்
இருப்பது கவலையளிக்கிறது. வைரஸ் தொற்றிய பலரிடம் அறிகுறிகள் தெரியவில்லை
என்றாலும், அறிகுறிகள் தென்படுவோரின் உடலில் எந்தளவுக்கு வைரஸ் தாக்கம்
உள்ளதோ அதே அளவுக்கு இவர்களது உடலிலும் வைரஸ் பரவியிருக்கிறது.அறிகுறிகள்
தென்படாதோர் மூலமாகவும் வைரஸ் மற்றவர்களுக்குப் பரவும்.
இதனால் சமூகத்தொற்றுப் பரவலுக்கான வாய்ப்பு
அதிகரித்துள்ளது. இதனால் அதிகப்படியான சோதனைகள் மேற்கொள்கிறோம். இதுவரை,
4.25 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து
கண்டுபிடிக்கும் வரை, ஊரடங்கிற்கு கட்டுப்பட்ட வாழ்க்கை முறையைக்
கடைபிடித்தாக வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 'ஐஸ்லாந்தில்
கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களில், 50 சதவீதம் பேருக்கு
எந்தவித அறிகுறியும் தெரியவில்லை' என, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதாரப்
பாதுகாப்பு மையத்தின் நோய் எதிர்ப்பு நிபுணரான கிகி கிரோன்வல்
தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலும் இதேபோன்ற
தகவல்கள் தெரியவந்துள்ளன.அறிகுறிகள் தென்படாத கொரோனா நோயாளிகள்
அதிகரித்துள்ளதால், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதே பாதிப்பிலிருந்த தப்ப
முடியும் என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment