
கவுகாத்தி: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடெங்கும்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினை மேலும் 2 வார காலத்திற்கு நீட்டிக்க
அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் மத்திய அரசுக்கு கடிதம்
எழுதியுள்ளார்.இது குறித்து கவுகாத்தியில் நடந்த பத்திரிக்கையாளர்கள்
கூட்டத்தில் பேசிய அசாம் முதல்வர், ' அசாமில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினை மேலும் 2
வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கினை
நீட்டிப்பது குறித்து மத்திய அரசே முடிவெடுக்கும்' இவ்வாறு அவர்
தெரிவித்தார்.அசாம் மாநிலத்தில் இதுவரை 87 பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 39 பேர்
கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment