மருந்தகங்களில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும்,
கூட்டம் கூடாமல் இருப்பதற்காகவும் மருந்துகளை வீட்டிற்கு கொண்டு வந்து
கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை
டி.எம்.எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவர்களின் குறிப்புகளோடு
மருந்தகங்களில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, முதல்வரின் உத்தரவிற்கு
இணங்க 3000 மருந்தகங்களை இணைத்து இலவச எண் தொடங்கியுள்ளகதாக தெரிவித்தார்.

18001212172 என்ற எண்ணிற்கு அழைத்தால் மருந்தகத்தில் இருந்து வீட்டிற்கே சென்று மருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவரின் குறிப்பு இருந்தால் மட்டுமே மருந்து வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். தற்போது சென்னையிலும் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் சில தினங்களில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
newstm.in

No comments:
Post a Comment