கோவை: கோவை மாவட்டத்தில் முகக்கவசம்
அணிவது கட்டாயம் என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முகக்கவசம்
அணியாமல் மக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவலை
தடுக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். கொடிய
கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று
கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 98
பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதாரத்துறை செயலாளர்
பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் முகக்கவசம்
அணிவது கட்டாயம் என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவை மாவட்டத்தில்
126 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்திருக்கும்
அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 'வெளிநாடு, வெளிமாநிலத்திலிருந்து
வந்தவர்கள், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்
இருந்தவர்கள் கடந்த மாதம் விமானங்களில் பயணித்தவர்கள், காய்ச்சல், இருமல்
போன்ற கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக
சுகாதாரத்துறைக்கோ, மாவட்ட நிர்வாகத்திற்கோ தகவல் அளித்திட தொடர்ந்து
அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. மாறாக அறிகுறிகள் இருந்தும் சோதனை
செய்யாமலும், சிகிச்சை எடுக்காமலும் உள்ள நபர்களின் மீது தொற்றுநோய்
தடுப்புச் சட்டம் 1897 மற்றும் பொதுசுகாதார சட்டம் 1939-ன் படி நடவடிக்கை
எடுக்கப்படும்.
கோயம்புத்தூரில் பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருதி கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புள்ள பகுதிகளான ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, மதுக்கரை, அன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊரக பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளிலும், மாநகரில் சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், பூமார்க்கெட், ஆர்.எஸ்.புரம், கே.கே.புதூர், கவுண்டம்பாளையம், சேரன்மாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட இடங்கள் பொதுமக்கள் வெளியில் செல்ல தடை செய்யப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதியில்லை. மேலும் இப்பகுதிகளுக்குள் செல்ல வெளிநபர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை அப்பகுதிகளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment