சென்னை: பிரதமர் உரையை ஆவலுடனும்
கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டரில்
பதிவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
9352-ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 308-லிருந்து
324-ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 980 குணமடைந்து
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின்
எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்
தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில்
தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது; நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப்
போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன். ஊரடங்கை 30-4-2020
வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது. ஊரடங்கு
நீடித்தாலும் மக்கள் வாழ வேண்டுமே?. 21 நாட்களாகத் தவிக்கும் ஏழை, நடுத்தர
வர்க்க மக்கள் எதிர்பார்ப்பது பண உதவி.
மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ 30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம். இந்த ரூ 30 லட்சம் கோடியில் ரூ 65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா மாட்டாரா என்பது தான் கேள்வி. நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment