
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்
நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த
வைரஸ் தாக்கத்தால், இந்தியாவில் இதுவரை 11 ஆயிரத்து 439 ஆக
அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும்
இரண்டாவது முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தலைநகர்
டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் தயாநகர் என்ற பகுதியை சேர்ந்தவர்
பிரவீஷ் (24). இவர், தனது நண்பர்கள் உடன் நேற்றிரவு செல்போனில் கேம்
விளையாடியுள்ளார்.
அப்போது, அவர்
தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்ததால் கோபமடைந்த சக நண்பரான ஜெய்வீர் என்பவர்
வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் வாங்குவாதம் முற்றவே, திடீரென ஆத்திரமடைந்த
ஜெய்வீர் தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு பிரவீஷை நோக்கி
சுட்டுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பிரவீஷின் வலியால்
அலறியுள்ளார், துப்பாக்கி வெடித்த சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு
கூட, ஜெய்வீர் தப்பி ஓடியுள்ளார். உடனே, பிரவீஷ் மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது
தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்வீரை போலீசார் தேடி
வருகின்றனர்.
No comments:
Post a Comment