டெல்லி: வரவிருக்கும் 2-3 வாரங்கள்
தான் கொரோனா தொற்றை கையாள்வதில், குறிப்பாக இந்தியாவிற்கு மிக கடினமான
காலகட்டமாக இருக்கும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,305 பேர் குணமடைந்து
வீடு திரும்பினர். இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 377
பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக உள்ள இடங்களில் வீடு
வீடாக சென்று ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20-ம்
தேதி வரை ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா பாதித்தவர்கள் தொடர்புடையவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 170 மாவட்டங்கள் தீவிர கொரோனா தொற்று பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் கூறியதாவது; இந்தியாவில் சுமார் 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. மேலும், கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டள்ளது என அவர் கூறியுள்ளார். கொரோனா வரை பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது, ' ஜனவரி 7ம் தேதி சீனாவில் முதல் கொரோனா வைரஸ் நோய் கண்டறியப்பட்ட செய்திக்கு பதிலளித்த நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இது தொடர்பாக ஜனவரி 8-ம் தேதி நடைபெற்ற நிபுணர் குழு கூட்டத்தில் நாங்கள் பணியாற்றத் தொடங்கினோம். ஜனவரி 17 அன்று, நாங்கள் சுகாதார ஆலோசனைகளை வழங்கினோம். வரவிருக்கும் 2-3 வாரங்கள் தான் கொரோனா தொற்றை கையாள்வதில், குறிப்பாக இந்தியாவிற்கு மிக கடினமான காலகட்டமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment