
வெளிநாடுகளில் வசிக்கும் 3 ஆயிரத்து 336 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூர்,
அரபு நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 53 நாடுகளில் 3ஆயிரத்து 336
பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால்
பாதிக்கப்பட்டு 25 இந்தியர்கள் இறந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களை தாயகத்திற்கு மீட்டுக்கொண்டு வருவது
சாத்தியமில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஒரு கோடியே 30 லட்சம் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பதாகவும் அரசு தெரிவித்திருந்தது. இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளி நாட்டவர்களை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டுமென ஐக்கிய அரபு எமிரேட் கேட்டுக்கொண்டுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள கொரோனா பாதித்த கேரள மாநிலத்தவரை மீட்டு வர இம்மாநில அரசு முயற்சிகள் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தகது.
newstm.in
No comments:
Post a Comment