
கரோனா வைரஸை ஒழிக்க லாக் டவுன் தீர்வல்ல என்று ராகுல் காந்தி
பேசியுள்ளார். ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் ஏன் முதலில் லாக்
டவுனை அமல்படுத்தின என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ்
முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி காணொலி மூலம் அளித்த
பேட்டியில், 'கரோனா வைரஸை ஒழிக்க லாக் டவுனால் முடியாது. லாக் டவுன்
என்பது ஒரு பாஸ் பட்டன் போன்றது. லாக் டவுன் தீர்வும் அல்ல. லாக் டவுனை
நீக்கிவிட்டால் மீண்டும் கரோனா வைரஸ் பரவும்.
ஆதலால், மக்களுக்குத் தீவிரப் பரிசோதனைகளைச் செய்வதன் மூலமே கரோனாவை ஒழிக்க முடியும்.
இந்த லாக் டவுன் காலத்தில் அதற்குரிய திட்டங்களை வகுக்கவேண்டும்.
லாக் டவுனைப் பயன்படுத்த வேண்டும். கரோனா வைரஸால் மக்கள்
பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அதிகமான பரிசோதனைகள்
நடத்தப்பட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்
மகாராாஷ்டிர
மாநிலத்தில் சிவசேனாவுடன் கூட்டணி அரசில் காங்கிரஸ் அங்கம் வகித்துள்ளது.
கரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து, பிரதமர் மோடி கடந்த
மாதம் 25-ம் தேதி லாக் டவுன் அறிவிக்கும் முன்பே லாக் டவுனை அறிவித்தது.
2-வது கட்டமாக லாக் டவுனையும் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்தது.
பஞ்சாப்பில்
ஆளும் காங்கிரஸ் அரசும், பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முன்பே லாக்
டவுனை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சுக்குப் பதிலடியாக பாஜக
ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளது. பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர்
பி.எல். சந்தோஷ் பதிவிட்ட கருத்தில், 'கரோனா வைரஸை ஒழிக்க லாக் டவுன்
தீர்வல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அப்படிெயன்றால்
காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஏன் பிரதமர் மோடி
அறிவிக்கும் முன்பே லாக் டவுனை அறிவித்தார்கள். மற்ற நாடுகளுடன்
ஒப்பிடும்போது இந்தியா கரோனா வைரஸை தீவிரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது.
0.3 சதவீதம் மட்டுமே இறப்பு இருக்கிறது. இதுவரை 12 ஆயிரம் பேருக்கு
மட்டும்தான் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகக் குறைவான வேகம்' எனத்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment