
அமெரிக்காவிற்கு கொரோனா மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடைகளை
அனுப்பி வியட்நாம் அரசு உதவி செய்து உள்ளது. வியட்நாம் அரசின் இந்த செயலை
உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.
கொரோனாவால் உலக அளவில்
அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இருக்கும் பல
நாடுகளிடம் அமெரிக்கா மருத்துவ உதவிகளை கேட்க தொடங்கி உள்ளது. இந்நிலையில்
அமெரிக்காவிற்கு ஒரு காலத்தில் எதிரியாக இருந்த வியட்நாம் தற்போது
அமெரிக்காவிற்கு உதவி செய்துள்ளது. முதற்கட்டமாக 5 லட்சம் மாஸ்குகளையும்,
பாதுகாப்பு உடைகளையும் வியட்நாம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது.

கூடுதலாக 4.5 லட்சம் மாஸ்குகள் மற்றும் பாதுகாப்பு உடைகளை அனுப்ப வியட்நாம் முடிவு செய்து, அதன் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இதனையடுத்து இக்கட்டான நேரத்தில் உதவி செய்த வியட்நாம் அரசுக்கு அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இதே அமெரிக்கா ஒரு காலத்தில் வியட்நாம் நாட்டின் பாதி பகுதியை உலக வரைபடத்தில் இருந்தே நீக்க முயன்றது. உள்நாட்டு போரில் தெற்கு வியட்நாமை ஆதரித்த அமெரிக்கா வடக்கு வியட்நாமை அழிக்க முயற்சி செய்தது. ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் வடக்கு வியட்நாம் வென்றது.
newstm.in
No comments:
Post a Comment