
உலக அளவில் கொரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20லட்சத்து 17ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு
லட்சம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும்
முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ்
பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 1204பேர் பாதிக்கப்பட்டுள்ளர்.
குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில்
நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில்
பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 1000க்கும் மேற்பட்ட
நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள
நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு
வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
"தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு 1242 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிக
பரிசோதனை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுவரை 21 ஆயிரத்து 994 பேருக்கு
பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 117 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 26 லெப்கள் மூலம் 5320 பேருக்கு ஒரு
நாளைக்கு டெஸ்டிங் செய்யபடிகிறது. இன்று கொரோனா வைரசால் 2 பேர்
உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 14 ஆக அதிகரித்துள்ளது" என
கூறினார்.
No comments:
Post a Comment