
இந்தியாவில் கொரோனா ஹாட் ஸ்பாட்டுகளாக 170 மாவட்டங்கள் அடையாளம்
காணப்பட்டு அங்கு ரெட் அலர்ட்டை குறிக்கும் வகையில் சிவப்பு ஜோனாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாள்
ஊரடங்கு முடிந்து மேலும் 19 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே
போல் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா அதிகம் பாதித்த மற்றும்
பரவும் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்தியாவசிய
பொருட்கள் கடையும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறக்கப்படுகின்றன. இதே
போல் மேலும் 207 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட்டுகளாக மாறும் அபாயம் உள்ளவை என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரெட் அலர்ட் மற்றும் பச்சை எச்சரிக்கை
மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தால் தான் ஊரடங்கு முழுமையாக
விலக்கப்படும்.
நாடு
முழுவதும் சுமார் 700 மாவட்டங்கள் உள்ள நிலையில் அவற்றில் 170 மாவட்டங்கள்
கொரோனா பரவும் ஹாட் ஸ்பாட்டாக கருதப்பட்டு அங்கு ரெட் அலர்ட்
விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த மாவட்டங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. அங்கு மெடிக்கல் ஷாப்புகளை தவிர மற்றவை மூடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment