கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்தவர் ஜெயமோகன், 29.
எம்.பி.பி.எஸ்., படித்துவிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெங்குமரஹாடா
என்ற மலை கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி
வந்தார். கடுமையான காய்ச்சல் காரணமாக, கோவையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.
அதில் 'கொரோனா நெகட்டிவ்' என ரிசல்ட் வந்துள்ளது. ஆனால், அவருக்கு டெங்கு
காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இந்நிலையில் ஜெயமோகன் சிகிச்சை
பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.ஜெயமோகன் உயிரிழந்த தகவல் அறிந்த அவரது
தாய், தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு,
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்; அங்கு அவர் நலமாக
உள்ளார்.
ஜெயமோகனின் நண்பர்கள் கூறுகையில், 'ஜெயமோகன் படிப்பாளி.
பிளஸ்2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். ஏழைகளுக்கு
உதவுவதற்காகவே மருத்துவம் பயின்றார். தனியார் மருத்துவமனைகளில் வாய்ப்பு
கிடைத்தும் பணிக்கு செல்லாமல், மலை கிராமத்தில் பணிக்கு சேர்ந்தார்.
அவர் மருத்துவர் மட்டுமல்ல தன்னார்வலர். பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மலை மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார்' என்றனர்.ஜெயமோகனின் இறப்பு குறித்து, மலை கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்திற்கு பரிசலில் தான் வர முடியும். டாக்டர் ஜெயமோகன் இங்கு மூன்றாண்டுகளாகப் பணியில் உள்ளார். அவர் வராமல் இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதே தனது லட்சியம் என எப்போதும் கூறுவார். எங்களில் ஒருவருக்குக் கூட கொரோனா வந்துவிடக்கூடாது என்பதற்காக பல அறிவுரைகள் வழங்கினார். ஆனால், அவரே காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக் கூறுவதை ஏற்க முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment