
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட மார்ச் 24-ம்
தேதியன்று மாலை முதல், ஏப்ரல் 14-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், தமிழக
காவல்துறை தரப்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு பதிவு செய்யப்பட்ட எஃப். ஐ. ஆர்: 1, 84, 748
கைது: 1,97, 536
வாகனங்கள் பறிமுதல்: 1, 56, 314
அபராதம் வசூல்: ரூ.82,32,644

இந்த
நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பொது இடங்களில் சர்வசாதாரணமாக
நடமாடும் பொதுமக்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சட்டத்தைப் பற்றி கவலைப்படாத இவர்களை என்ன செய்வது என்று தமிழக போலீஸார் யோசித்து வருகிறார்கள்.
சென்னை கடற்கரைச் சாலையில உள்ள டிஜிபி அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, '' கொரனா நேரம் என்பதால்,
கைது நடவடிக்கையை நாங்கள் உடனடியாக அமல்படுத்த முடியவில்லை. காரணம்,
சிறைச்சாலைகளில் கும்பல் நிரம்பி வழியும். எனவே, ஊரடங்கு உத்தரவு வாபஸ்
பெறப்பட்டதும், சட்டப்படியான சம்பிரதாயங்களை நாங்கள் துவக்க இருக்கிறோம்.
அதேபோல், வாகனங்கள் ஆங்காங்கே போலீஸ் கஸ்டடியில் இருக்கின்றன. அவற்றை
ஊரடங்கு உத்தரவு முடியும் போது திரும்பித்தர நினைத்தோம். ஆனால், இரண்டாவது
தடவையாக ஊரடங்கு நீடிக்கப்பட்டிருப்பதால்,
அவை குறித்து எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அரசிடம் கருத்து
கேட்டிருக்கிறோம். ஏனென்றால், வாகனங்களை நாங்கள் திருப்பிக்கொடுத்தால்,
அதில் மீண்டும் வலம் வருவார்கள் என்று கருதுகிறோம். எனவே, இதுபற்றி
இப்போதைக்கு கருத்து சொல்லமுடியாது '' என்றார்.
No comments:
Post a Comment