
மும்பை: பந்த்ராவில் ரயில் சேவை உள்ளதாக தவறான தகவல் அளித்ததாக உள்ளூர்
டி.வி. சானல் நிருபரை போலீசார் கைது செய்தனர்.மும்பையில் நேற்று பந்த்ரா
ரயில் நிலையத்தில் ரயில் சேவை இயக்கப்படுவதாக வதந்தி பரவியது. இதனை நம்பி
வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் ஆவலில் ஒரே
நேரத்தில் ரயில் நிலையம் முன் குவியத்துவங்கினர். இதனால் அங்கு பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.போலீசார் தடியடி நடத்தினர்.வதந்தியை பரப்பியது குறித்து
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் பேட்டியளித்தார்.
இந்நிலையில் பந்த்ரா ரயில் நிலையத்திலிருந்து ரயில் சேவை இயக்கப்படுவதாக
வெளிமாநில தொழிலாளர்களுக்கு தவறான தகவல் அளித்ததாக ராகுல் குல்கர்னி என்ற
உள்ளூர் டி.வி.
நிருபரை போலீசார் கைது செய்தனர். நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தபட உள்ளதாக போலீஸ் டி.எஸ்.பி., தெரிவித்தார்.
No comments:
Post a Comment