கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி
நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த இளைஞர்
குணமடைந்துள்ளார்.
24
வயதாகும் அந்த இளைஞர் கடந்த மாதம் 22ஆம் தேதி துபாயிலிருந்து திருச்சி
வந்தார். இவருக்கு 24 ஆம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை
அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் முதல் கொரோனா பாதித்த நபரும் இவர்தான்,
குணமடைந்த நபரும் இவர் தான் என்று குறிப்பிடத்தக்கது. தங்கள் உயிரை பெரிதாக
கருதாமல் சேவையாற்றி வரும் மருத்துவக் குழுவினருக்கும், கொரோனா தடுப்புக்
குழுவினருக்கும் மாவட்ட ஆட்சியர் சிவராசு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
newstm.in

No comments:
Post a Comment