
வேலூரில் வாரத்திற்கு 3 நாட்கள், அதுவும் 4 மணி நேரங்களுக்கு
மட்டுமே மளிகைக் கடைகள் திறக்க வேண்டும் என ஆட்சியர் சண்முகசுந்தரம்
உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி
வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலூரில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் எங்கும் பயணிக்காத 45
வயது நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து வேலூர்
மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதனொரு பகுதியாக வேலூரில் ஊரடங்கு உத்தரவுக்கு மேலும்
கடுமையாக்கப்பட்டுள்ளது.

அதன்படி,
மளிகை கடைகள் அனைத்தும் வாரத்தின் திங்கள், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய
கிழமைகள் மட்டுமே திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
அத்துடன் இறைச்சிக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்கவே
கூடாது என தடை விதித்துள்ளார். அத்தியாவசிய தேவையான பால் கடைகளை மட்டும்
காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும்
திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர
காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவற்றை தினந்தோறும் காலை 6 மணி
முதல் 10 மணி வரை மட்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார். மருந்துகடைகள் வழக்கம்
போல இயங்கும் என தெரிவித்துள்ளார். அதேசமயம் தள்ளுவண்டிகள், சாலையோர
கடைகள், பெட்டிக்கடைகள் என எதுவும் திறக்கக்கூடாது என கண்டிப்புடன்
தெரிவித்துள்ளார்.
newstm.in
https://m.dailyhunt.in
No comments:
Post a Comment