மும்பை: 'எஸ் பேங்க்' (YES Bank) நிர்வாக குழுவை கட்டுப்பாட்டில்
எடுத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. மேலும் அந்த வங்கியில் வைப்பு தொகை
வைத்திருப்போர் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க கட்டுப்பாடு
விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
உடனடியாக எஸ் பேங்க் நிர்வாக குழுவை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில்
எடுத்துள்ளதாகவும், முன்னாள் பாரத ஸ்டேட் வங்கி தலைமை நிதி அலுவலர்
பிரசாந்த் குமாரை நிர்வாக அதிகாரியாக நியமித்து உள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு
மாதங்களுக்கு முன்பாக பிஎம்சி வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில்
எடுத்தது. இதன் பிறகு தற்போது எஸ் பாங்கையும் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
வராக்கடன் அதிகரித்ததால் நிதிச் சுமை ஏற்பட்டு,
தனியார் வங்கியான எஸ் பேங்க் சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்ததாக சமீப
காலங்களாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
இந்தநிலையில்
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும், ஒரு முயற்சியாக ரிசர்வ் வங்கி இந்த
நடவடிக்கையை எடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.YesBankலிருந்து ரூ.50,000த்திற்கு மேல்
தொகை பெற வாடிக்கையாளர்களுக்கு சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
*மருத்துவ அவசரநிலை
* உயர் கல்வி
*திருமண செலவுகள்
*தவிர்க்க முடியாத அவசரநிலை
இதுபோன்ற
காரணங்கள் இருந்தால், அதை வங்கி மேலாளரிடம் குறிப்பிட்டு, அவர்
அனுமதித்தால், கூடுதல் பணத்தை தங்கள் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ள
முடியும்.
source: oneindia.com

No comments:
Post a Comment