Latest News

  

எந்த கட்சியாக இருந்தாலும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள்: டெல்லி கலவரம் குறித்து மாநிலங்களவையில் அமித்ஷா விளக்கம்

புதுடெல்லி: ஹோலி விடுமுறைக்குப் பிறகு வரும் நேற்று மக்களவை மீண்டும் கூடியது. அப்போது, மக்களவையில் மாலை 5;30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி கலவரம் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து, டெல்லி கலவரம் குறித்து இன்று மாநிலங்களவையில், அமித்ஷா விளக்கம் அளித்தார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம் பிரச்சினையில் தவறான பிரச்சாரம் பரப்பப்படுவதாக எனது முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் எடுத்துக்கொள்வதல்ல, குடியுரிமையை வழங்குவதாகும் என தெரிவித்தார்.

எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள், அவர்கள் எந்த மதத்தையோ, சாதியையோ, கட்சியையோ இருக்கலாம், அவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள் என்றும் அமித் ஷா தெரிவித்தார். டெல்லி வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளின் முகம் அடையாளம் காண ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆதார் தரவு அதற்குப் பயன்படுத்தப்படவில்லை. சில ஊடகங்கள் தவறாக தகவல் தெரிவிக்கின்றனர்.

சில சமூக ஊடக கணக்குகள் வன்முறைக்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி 25-ம் தேதி செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்த கணக்குகள் வெறுப்பை பரப்ப மட்டுமே செயல்பட்டன. அவற்றின் உரிமையாளர்கள் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்க வேண்டாம், இது டிஜிட்டல் யுகம், நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் முன்வைப்போம் என்றார்.

நீதிபதி எஸ்.முரளிதர் இடமாற்றம் குறித்து விளக்கமளித்த அமித்ஷா, இடமாற்றம் உத்தரவை மட்டுமே அரசு வெளியிடுகிறது. பரிந்துரைகளை கொலீஜியம் செய்கிறது. எனவே, இது எந்தவொரு குறிப்பிட்ட வழக்கிலும் இணைக்கப்படக்கூடாது. இது ஒரு வழக்கமான இடமாற்றம். நீதிபதியின் ஒப்புதல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

தேசிய மக்கள் தொகை பதிவுக்கு (என்.பிஆர்) எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று மீண்டும் சொல்கிறேன். கேட்கப்படும் அனைத்து தகவல்களும் விருப்பமானது. NPR -ன் செயல்முறையிலிருந்து யாரும் பயப்பட வேண்டியதில்லை. 'டி' (சந்தேகத்திற்குரிய) வகை இருக்காது என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.