
துாத்துக்குடி: பொது இடத்தில் காலால் எட்டி உதைத்து தாக்குதலில் ஈடுபட்ட
பெண் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.துாத்துக்குடி
சி.பி.சி.ஐ.டி., போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சபீதா 41. இவரது வீடு
அய்யனடைப்பில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் 37 அங்கு வீட்டு
வேலைகள் செய்துவந்தார். சபீதா, கணவர் ராஜ், குடும்பத்தினர் வெளியே சென்ற
பிறகு மாரியம்மாளை சந்திக்க அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர்
வீட்டுக்குள் வந்துசெல்வது சிசிடிவி காமிரா காட்சிகளில் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து, சபீதா கணவர் ராஜ் புகாரின் பேரில், மாரியம்மாள், சங்கர்
ஆகியோர் தங்கநகைளை திருடிச்சென்றதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனிடையே
மாரியம்மாள், சங்கர் ஆகியோரிடம் தகராறு செய்து இன்ஸ்பெக்டர் சபீதா அவர்களை
தாக்கினார்.
இந்த வீடியோவும் வெளியானது. பொது இடத்தில் தாக்குதலில்
ஈடுபட்ட சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் சபீதா திருநெல்வேலி சரக போலீசுக்கு
மாற்றம் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment