புதுடில்லி: 'கடந்த 6 நாட்களுக்கு முன்பு இத்தாலியிருந்து வந்தது,
டில்லிக்கு கொரோனாவை பரப்பவா ராகுல்?' என பா.ஜ., எம்.பி., கேள்வி எழுப்பி
உள்ளார்.காங்., எம்.பி., ராகுல், வடகிழக்கு டில்லியில் நடந்த வன்முறையால்,
பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களை
சந்தித்த பா.ஜ., எம்.பி., ரமேஷ் பிதூரி, 'வன்முறை பாதித்த பகுதிகளை
பார்வையிடும் ராகுல் அவர்களே, நீங்கள் கடந்த 6 நாட்களுக்கு முன்பு தான்
இத்தாலியிலிருந்து இந்தியா வந்தீர்கள். விமான நிலையத்தில் மருத்துவ
பரிசோதனை செய்தீர்களா.கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்செரிக்கை நடவடிக்கை
எதுவும் எடுத்தீர்களா. அல்லது கொரோனாவை பரப்ப டில்லி செல்கிறீர்களா.
இத்தாலியிலிருந்து இந்தியா வந்த ராகுல், கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment