நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதியைக்
கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு செய்துள்ளது. பவன் குமார்
குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
நிராகரித்ததையடுத்து டெல்லி அரசு இந்த மனுவை மேற்கொண்டுள்ளது.
தூக்குத்
தண்டனை கைதிகளான முகேஷ் குமார் சிங் (32), பவன் (25), வினய் ஷர்மா (26),
அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி 17ம்
தேதி அளித்த டெத் வாரண்ட்டில் மார்ச் 3ம் தேதியை தூக்கிலிடும் தேதியாக
அறிவித்தது.
ஏற்கனவே ஜனவரி 22-ம்
தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு
நிறுத்தப்பட்ட நிலையில் மார்ச் 3ம் தேதி டெத் வாரண்டும் செயல்படாமல்
தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
தூக்கு தண்டனை குற்றவாளிகளின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டன என்றே தெரிகிறது.
இந்நிலையில்
தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியைக் கோரி டெல்லி அரசு
நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. இந்த மனு கூடுதல் அமர்வு நீதிபதி
தர்மேந்திர ராணா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று
தெரிகிறது.

No comments:
Post a Comment