
கரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை சமாளிக்க
நடவடிக்கைகள் தேவை என்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை
வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் ஏற்கெனவே பலவீனமான நிலையில்
இருக்கும் நம் பொருளாதாரத்துக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்து, எனவே வைரஸ்
பரவலைத் தடுக்க பணியாற்றுபவர்களுக்கு கரகோஷம் செய்வதால் என்ன பயன்
என்கிறார்.
'கரோனா வைரஸ் நம் பலவீனமான பொருளாதாரத்தின் மீதான
தாக்குதல் ஆகும், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கும்
தினக்கூலிகளுக்கும் கரோனா பொருளாதார விளைவினால் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வெறும்
கரகோஷம் ஒரு போதும் உதவாது, இன்றைய தினம் அவர்களுக்குத் தேவை ரொக்க
நிவாரணம், வரிச்சலுகைகள், இதோடு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில்
நிவாரணம் அளிப்பதொடு பெரிய பொருளாதார சலுகைகளை அறிவிக்க வேண்டு, உடனடியாக
நடவடிக்கை எடுங்கள்' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment