
பெங்களூரு நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி செல்லும் ராஜ்தானி
எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல் புறப்பட்டது. ஒரு தம்பதி செகந்திராபாத்
நகரில் இன்று ரெயிலில் ஏறியுள்ளனர்.
தெலுங்கானாவின் காசிபேட்டை
பகுதிக்கு காலை 9.45 மணியளவில் ரெயில் வந்து சேர்ந்தது. அந்த தம்பதியில்
கணவர், தனது கைகளை கழுவும்பொழுது, அவரது கையில் கொரோனா பாதிப்பிற்காக
தனிமைப்படுத்தும் அடையாளம் இருந்துள்ளது.
சக பயணி ஒருவர் இதனை
கவனித்து , டிக்கெட் பரிசோதகரிடம் கூறியுள்ளார். இதன்பின் ரெயில்
பெட்டியில் இருந்து அந்த தம்பதி கீழே இறக்கி விடப்பட்டனர்.
அவர்கள்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காசிபேட்டை பகுதியில் ரெயில்
நிறுத்தப்பட்டு, அந்த பெட்டி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.
ஏ.சி. அணைக்கப்பட்டு , பின்பு காலை 11.30 மணியளவில் டெல்லி நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது.
கொரோனா
தம்பதியால் 1.45 மணிநேர காலதாமதத்துடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்
புறப்பட்டு சென்றது பயணிகள் இடையே சலசலப்பினை ஏற்படுத்தியது.
Newstm.in
No comments:
Post a Comment