
பிரிட்டனில் 20 வயது பெண் ஒருவர் 13 வயது சிறுவனுடன்
செக்ஸ் வைத்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
பெர்ஷையர் வின்ட்சர் நகரத்தை
சேர்ந்த 20 வயது பெண் லியா கார்டைஸ், நர்சரி பள்ளியில் டீச்சராக வேலை
செய்து வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு போதையில் லியா ஒருவரின்
வீட்டிற்குள் நுழைந்து 13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்.
அதன் பிறகும் சிறுவனுடன் அந்த டீச்சர் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
அதே நேரத்தில் லியாவுக்கு பாய் ஃப்ரண்ட் ஒருவரும் இருந்துள்ளார். சிறுவன் விவகாரம் பாய் ஃப்ரண்டுக்கு தெரியாது. இறுதியில் காதலனை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் குழந்தை பிறந்தது. சிறுவன் குறித்து காதலனுக்கு அரசல் புரசலாக தெரியவர பிறந்த குழந்தை தன்னுடையது தானா என்ற சந்தேகம் வந்தது. ஆனால் சிறுவனுடன் பழகவில்லை என சத்தியம் செய்தார் லியா. இந்நிலையில் காவல்துறையிடம் லியாவின் கணவர் புகார் அளித்தார்.
காவல்துறை கூறியதை அடுத்து லியாவுக்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு அப்பா 13 வயது சிறுவன் தான் என தெரியவந்தது. லியாவின் கணவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். இத்தனை நாட்கள் தனது குழந்தை என நினைத்திருந்த அவருக்கு 13 வயது சிறுவனின் குழந்தை அது என தெரிந்ததும், ஷாக்கில் இருந்து வெகுநேரம் மீளவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment