Latest News

  

மத்திய அரசில் வேலை வேண்டுமா? பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தின் நீலகிரியில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடத்தினை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)
பணி: ஆய்வக உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருவோருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR - IARI, Regional Station, Wellington 643 231.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.03.2020
மேற்கண்ட இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iari.res.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் பதவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 18 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்று பயனடையவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/BRNSTech_Wellington_25022020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.