Latest News

  

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

விருதுநகர்: சிவகாசியை மாநகராட்சியாக்கு பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பழனிசாமி பேசியதாவது: விருதுநகர் வியாபார நகராகவும், சிவகாசி தொழில் நகரமாகவும் தற்போது விளங்கி வருகிறது. குழந்தைகளின் இறப்பு விகிதம், பிரசவத்தின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்துள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2025க்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தரமான மருத்துவக்கல்வி கிடைக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.சிவகாசியை மாநகராட்சியாக்கும் பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகாசியில் சாலைகள், பூங்காக்கள் என உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 5976 இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. கல்வி உதவித்தொகையாக ரூ.10.70 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்று ரூ.

828 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.காசி விஸ்வநாதர் கோயில் ராஜகோபுரம் அமைக்க ரூ.3 கோடி நிதி வழங்கப்படும். குண்டாற்றின் குறுக்கே 2 உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும். விருதுநகர், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்ககளுக்கு புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும். அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிவாயு மயானம் அமைத்து தரப்படும். பட்டாசு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பை பெற்று தந்துள்ளோம்.என்பிஆரில் புதிதாக கொண்டுவந்துள்ள 3 விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. சிறுபான்மையினர் சில குழப்பவாதிகளை நம்பாமல் நிம்மதியாக வாழுங்கள். சிஏஏ சட்டத்தால் தமிழ் மண்ணில் பிறந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன். முஸ்லிம் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு உள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.