
கரோனா வைரஸ் தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக
கிழக்கு ஆசியாவில் மேலும் 1.10 கோடி(11 மில்லியன்) மக்கள் வறுமை நிலைக்குத்
தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின்
வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட
நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின்
பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில் கரோனாவால்
ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் கிழக்கு ஆசியாவில் மேலும் 1.10
கோடி(11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி
எச்சரித்துள்ளது.
மேலும், இதுகுறித்து
கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர்
ஆதித்யா மேட்டூ கூறுகையில், 'கரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை
ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதோடு பெரும்
பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும், சீனா கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.
உலக
மக்கள் தொகையில் 5ல் 2 பங்கினர் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில்
வணிகம் முடங்கியுள்ளதால் கரோனா பாதிக்கப்டட நாடுகள் பொருளாதார மந்த நிலையை
எதிர்கொள்ளும்.
கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக்
பிராந்தியத்தில், சீனாவைத் தவிர்த்து, மற்ற நாடுகளின் அடிப்படை வளர்ச்சி
1.3% ஆக குறையும். எனினும் உலக நாடுகளின் பொருளாதாரம் விரைவில் இயல்பு
நிலைக்குத் திரும்பும்' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment