
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு
உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் வேலை பார்த்த
தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அங்கு சென்றதும்
அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்
வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர்
மாநிலம் தாம்தாரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 35 வயது நபர் ஒருவர்,
தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில்
வேலை பார்த்த அவர் கடந்த 20ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
அவருக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. எனினும் அவரை பாதுகாப்பு கருதி
வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்.
29ம் தேதி வரை அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவருக்கு நோய்த்தொற்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த
சூழ்நிலையில் நேற்று காலையில் அவர் தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு
மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். அவரது இறப்புக்கான காரணம்
குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment