
சென்னை: இன்று(மார்ச் 31) ஓய்வு பெறவிருந்த டாக்டர்கள், நர்சுகள்
மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் பணி 2 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது
தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய் தடுப்பு
நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு
குழுக்களுடன் ஆலோசனை செய்த பின், மக்களின் நன்மை கருதி கீழ்கண்ட உத்தரவு
பிறப்பிக்கிறேன். இன்றுடன் ஓய்வு பெற உள்ள டாக்டர், நர்சுகள் மற்றும்
மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்கு பின் ஒப்பந்த
முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர தற்காலிக பணி நியமன ஆணை
வழங்கப்படும்.உலகெங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த
அரசு அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.
பொது நலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து
நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு
அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment