
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின்
தலைமையில் கட்சி தலைமையகமான அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில் பொருளாளர்
துரைமுருகன், நேரு, உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி தேர்தல், வரும் 21-ம் தேதி நடக்கவுள்ள உட்கட்சி தேர்தல் குறித்து
ஆலோசிக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், என்.ஆர்.சிக்கு
வழிகோலும் என்.பி.ஆரையும், ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி,
மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி - 2 கோடிக்கும் மேற்பட்ட
கையெழுத்துக்களை தமிழக மக்களிடம் பெற்று, மேதகு குடியரசுத் தலைவர்
அவர்களிடம் ஒப்படைத்து, முக்கியமான இந்த தேசியப் பிரச்சினையை அடுத்த
முக்கியமான கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ள, கழகத் தலைவர் அவர்களுக்கும்,
இக்கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வெற்றி பெற வைத்த அனைத்துக் கட்சித்
தலைவர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் நன்றி தெரிவித்துக்
கொள்கிறது.அ.தி.மு.க.
அரசு தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுக்கு மதிப்பளிக்காமல்
- என்.ஆர்.சிக்கு வழி திறக்கும் என்.பி.ஆரை தமிழகத்தில் நடத்தத்
தன்னிச்சையாக அனுமதித்தால், அனைத்துக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து,
என்.பி.ஆருக்கு எதிராக மக்களைத் திரட்டி, அண்ணாதுரை காட்டிய காந்திய அற
வழியில், மகத்தான ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை, திராவிட முன்னேற்றக் கழகம்
நடத்திட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்றும் இந்தக்
கூட்டம் எச்சரிக்கை செய்ய விரும்புகிறது.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து
செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தை
நிறைவேற்றவேண்டும் போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment