
சமீப காலங்களில் அதிகம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு
வருகின்றனர். காக்க முடியாத உயிர்க்கொல்லி நோயாக புற்றுநோய் உள்ளது.
புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்பும் பல்வேறு
நிகழ்ச்சிகளையும், கருத்தரங்குகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. தனியார்
நிறுவனங்களும் பல்வேறு சேவைமையங்களும் கூட இதில் பங்கேற்று வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பிங்க் மராத்தான் புற்றுநோய் விழிப்புணர்விற்க்காக நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு பிங்க் மராத்தான்2020 கோவையில்
நடத்தப்பட்டது.சுற்றுச்சூழல் மாசு அடைவதும், மாறி வருகிற உணவுப் பழக்க
வழக்கங்களுமே புற்றுநோய்க்கு முக்கியக் காரணங்களாக கூறப்படுகிறது.
போதிய
விழிப்புணர்வுடன் செயல்பட்டால் ஆரம்ப நிலையிலையே கண்டறியப்பட்டால்
குணப்படுத்த முடியும் விழிப்புணர்வு இல்லாததால் ஒவ்வொரு வருடமும்
புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது
என்ற கருத்து விளக்க உரைகளுடன் 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 3 கிலோ
மீட்டர், 2 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளில் கோவை நேரு விளையாட்டு
மைதானத்தில் மராத்தான் போட்டிகள் நடத்தப் பட்டன. இந்தப் போட்டிகளில்
அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏறக்குறைய 1000
பேர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment