
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை
எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும், வன்முறைகளும்,
கலவரங்களும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன . தமிழகத்தை பொறுத்த வரை
எதிர்க்கட்சிகள் பேரணி, மனிதச் சங்கிலி, ஊர்வலங்கள், கோல எதிர்ப்பு எனப்
பல்வேறு வகைகளிலும் எதிர்ப்புகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்
கூடும் இடங்கள்,கல்லூரி வளாகங்கள், வீடு வீடாகவும் சென்று கையெழுத்துப்
பெறப்பட்டு இருக்கிறது.
கூட்டணிக்
கட்சித் தலைவர்கள் மூலம் கையெழுத்துப் படிவங்கள் பெறப்பட்டன. பிப்ரவரி 2ல்
தொடங்கப்பட்ட இந்த இயக்கம் பிப்ரவரி 8 வரை ஒரே வாரத்தில் 2கோடியே
5லட்சத்து 66 கையெழுத்துக்கள் பெறப்பட்டன.அண்ணா அறிவாலயத்தில் உள்ள
அண்ணாதுரை, கருணாநிதி சிலைகளின் அருகில், கட்சித் தலைவர் ஸ்டாலின்
தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பில் இக்கையெழுத்து
படிவங்கள் ஜனாதிபதியின் பார்வைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு
இருக்கிறது.
No comments:
Post a Comment