
ராணிப்பேட்டை முத்துக்கடையில்
ராணிப்பேட்டை சர் ஜமாத் சார்பில், வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில்
ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும் திருத்தப்பட்ட
குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த
ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, விஷாரம், கல்மேல்குப்பம்
என பல்வேறு பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். பேரணாம்பட்டு
நான்குகம்பம் பகுதியில் பேரணாம்பட்டு அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில்
போராட்டம் நடைபெற்றது. வாணியம்பாடி ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது.
No comments:
Post a Comment