
காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில்
அந்நாட்டின் அதிபராக அஷ்ரப் கானி மீண்டும் தேர்வாகி உள்ளார். கடந்த வருடம்
நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியான நிலையில், அவர் மீண்டும் பெரிய
வெற்றி பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தேர்தல்கள்
வினோதமானது. அங்கு பல பகுதிகள் இன்னும் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில்
இருக்கிறது. அதேபோல் அங்கு தேர்தல் நடந்தால் உடனடியாக முடிவுகள்
அறிவிக்கப்படாது. பல மாதங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இதனால்
அங்கு தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் ஏற்படுவதாகவும் புகார்கள்
வைக்கப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த ஆண்டு
செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
பல நாட்கள் கழித்து இதற்கான தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பரில் வெளியானது.
இந்த
தேர்தலில் அதிபராக உள்ள அஷ்ரப் கானி போட்டியிட்டார். அதேபோல் முன்னாள்
வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அப்துல்லா போட்டியிட்டார். இவர்கள்
இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. தேர்தல் நேரத்தில்
கடுமையான விவாதங்கள், மோதல்கள் நிகழ்ந்தது.
கடைசியில் இந்த
தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றிபெற்றார். இவர் 50.64 % வாக்குகள் பெற்றார்.
தேர்தல் நடந்த போது சில இடங்களில் முறைகேடு புகார்கள் வந்தது. அதேபோல் சில
இடங்களில் தீவிரவாத தாக்குதல்களும் நடந்தது. இந்த நிலையில் இந்த வாக்குகளை
மீண்டும் எண்ண வேண்டும்,கானி வெற்றி முறைகேடானது என்று எதிர்க்கட்சிகளின்
போட்டியாளர் அபதுல்லா மனு அளித்தார்.
இவரின்
கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம். இதனால், இந்த வாக்குகள் மீண்டும்
நேற்று மாலையில் இருந்து எண்ணப்பட்டது. இதையடுத்து, மீண்டும் எண்ணப்பட்ட
வாக்குகளில் அஷ்ரப் கானி 50.64% வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இதையடுத்து அஷ்ரப் கானி வெற்றி உறுதி செய்யப்பட்டது. அஷ்ரப் கானி 9
லட்சத்து 23 ஆயிரத்து 868 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.
இதனால் அஷ்ரப் கானி தனது அதிபர் பதவியில் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
source: oneindia.com
source: m.dailyhunt.in
No comments:
Post a Comment