
நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் சமையல் எரிவாயு விலை
உயர்வைக் கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் இன்று
(புதன்கிழமை) ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.
மானியமில்லாத
சமையல் எரிவாயு விலையை ரூ.149 வரையும், மானியத்துடன் வழங்கப்படும் எரிவாயு
விலையை ரூ.153 வரையும் மத்திய அரசு அண்மையில் உயர்த்தியது. இந்நிலையில்,
நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இந்த விலை உயர்வைக் கண்டித்து இந்திய
மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் இன்று ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.
இதில்,
சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் ஜீவா லட்சுமிபிரியா, மாவட்டச் செயலாளர்
எஸ். மேகனா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment