
இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில்
2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும்
தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச்
செல்லும் மருத்துவர்களுக்குக் கூட இந்த நோய் பரவுவதால் சீன அரசு மக்களைப்
பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது.

சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த நோயைக்
கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதில் கொரோனா பாதிக்கப்பட்ட
நாடுகளில் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் முயற்சியில்
மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதே போல ஈரான் நாட்டிலும் இந்தியாவைச்
சேர்ந்த 450 பேர் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில்
ஈரானில் இருக்கும் 450 பேரில் 300 பேர் தமிழர்கள் என்றும் மீன்பிடிக்கச்
சென்று போது அவர்கள் அங்கே சிக்கிக் கொண்டதாகவும், பல்வேறு நாடுகளில்
விமானம் ரத்து செய்யப் பட்டுள்ளதால் அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல்
தவித்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு
கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், கிஷ் துறைமுகம் (Port Kish), சேரூ (Cheeru) உள்ளிட்ட ஈரானின்
பல்வேறு துறைமுகங்களில் சிக்கியுள்ள அவர்களை மீட்டு பத்திரமாகத் தாயகம்
அனுப்பி வைக்குமாறும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment