
சென்னை: குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு
அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி அளித்திருப்பதாக சென்னை
உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2015 குரூப் -1 தேர்வில்
முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேர்வு முறைகேடு
குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு,
நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை
விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான திமுக வழக்குரைஞர், தேர்வு முறைகேட்டில்
முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணையை சிபிஐ-க்கு
மாற்ற வேண்டும் என்றும் வாதிட்டார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய வழக்குரைஞர்
வாதிடுகையில், முறைகேட்டில் தொடர்புடைய அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு
தொடர அரசின் அனுமதியை பெற்றுள்ளதாகவும், விரைவில் குற்றப் பத்திரிக்கை
தாக்கல் செய்யப்படும் என்று விளக்கம் அளித்தார்.
இரு
தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து, ஏப்ரல் ஆறாம்
தேதிக்குள், தமிழக அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment